சரத்குமாரின் 150வது படம் சரத்குமார் ஸ்மிருதி வெங்கட் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஒரு சைக்கோ கில்லரால் மிகப்பெரிய விபத்தை சந்திக்கும் cb cid ஆன சரத்குமார் தனது நினைவுகளை இழக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடம் கழித்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார்.
அதுவரையிலும் சீரியல் கில்லரின் கொலை பெரிதாக இல்லாமல் இருந்தது. மறுபடியும் கொலை ஆரம்பமாகிறது. இதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக சரத்குமார் அழைக்கப்படுகிறார். இந்த சீரியல் கில்லரின் கொலைக்கு என்ன காரணம்..? சரத்குமார் ஏன் விபத்தில் சிக்கினார் என்ற முடிச்சுகளை அவிழ்ப்பதே படத்தின் மொத்த கதை.
ஒரு அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் சரத்குமார், சுரேஷ் மேனன் மற்றும் பல நடிகர்களின் நடிப்பு பிரமிக்கும்படியாக உள்ளது.
ஆனால் திரைக்கதை மிகவும் தொய்வாக உள்ளது. படத்தில் விறுவிறுப்பு இல்லை. சைக்கோ கில்லர் என்றால், ஒரு மோட்டிவேஷன் இருக்கும். ஆனால் இந்த படத்தில் காட்டப்படும் சைக்கோ கில்லருக்கு மோட்டிவேஷன் தவிர பழிவாங்கும் எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஆக மொத்தத்தில் இவன் சைக்கோவா..? கொலையாளியா..? என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குனர் இந்த திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்குவதற்கு வேறு சில விஷயங்களை சேர்த்து இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆக மொத்தத்தில் ஸ்மைல் மேன் படம், படம் பார்க்கும் சிலரை ஆங்ரிமேனாக ஆக்கும் என்பது உண்மை.