வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்- K 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ SANTA 20 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
“யாத்திசை” மற்றும் “குமார சம்பவம்” போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை வழங்கிய வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் இந்த ஈர்க்கக்கூடிய கதையை K7 ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் மர்மம் -சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்ட துப்பறியும் கதையாகும்.
‘SANTA 20 ‘திரைப்படம் ஒரு துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்தி தயாராகிறது. அவர் ஒரு குற்றத்தை கண்டறிய தொடங்குகிறார். இது அவரை எதிர்பாராத வகையில் சாகசமும் , சிலிர்ப்பூட்டும் பயணத்திலும் ஆழ்த்துகிறது.

இந்தப் படத்தில் சந்தானத்துடன் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் மற்றும் ஃபௌஸி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சிக்கு
திலீப் சுப்பராயன் மற்றும் படத்தொகுப்பை கே. எல். பிரவீண் கவனிக்கின்றனர்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சந்தானத்தின் திரைப்பயணத்தில் மிகவும் சுவாரசியமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக SANTA 20 மாற உள்ளது.