GV பிரகாஷ் குமார்,திவ்யபாரதி சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல் என்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்.
தூத்துக்குடி மாவட்டம் கூவத்தூர் கடற்கரை கிராமத்தில், பல உயிர்கள் பலியாகின்றன. இதற்குக் காரணம் அந்த ஊரில் ஒரு துரோகியை வெட்டிப் புதைத்தது தான் என்று ஊர் மக்களால் நம்பப்படுகிறது. இதனால் அவரின் சவப்பெட்டியை கடலுக்குள் வீசி எறிகின்றனர். ஆனால் அதன்பின் கடலுக்குள் செல்கிறவர்கள் அனைவரும், திரும்பி வரவே இல்லை. அங்கு ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று நம்பி அந்த கடற்கரையில் மீன்பிடிப்பதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன அரசாங்கம். இதனால் அந்த ஊர் மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் அருகில் இருக்கும் தூத்துக்குடி நகரில் கடல் வழி கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். அதிலேயே அதில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் கிங் என்கிற ஜிவி பிரகாஷ் குமார். அவர் கடலுக்கு ஒரு தடவை செல்லும் வழியில் அவரை நம்பி வந்த ஒரு சிறு பையன் உயிர் இழக்க நேரிடுகிறது. இதனால் கோபமடைந்த ஜிவி பிரகாஷ் மீண்டும் தனது கிராமத்தின் கடற்கரை பாதை வழியாக சென்று மீன் பிடிக்கிறேன் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அதை பொதுமக்கள் தடுத்தும், அது மட்டுமில்லாமல் அவருடைய தாத்தா தடுத்தும் அவர் கடலுக்கு போட்டை கடத்திச் சென்று செல்கிறார். முடிவில் அவர் சொன்னபடி கடலில் இருந்து மீன் பிடித்து வந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையை கதையாக சொல்லும் பொழுது எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறதோ அதே நேரத்தில் திரைக்கதையில் சுத்தமாக இல்லவே இல்லை. சுவாரசியங்களும் பெரிதாக இல்லை. முதல் பாதி உப்பு சப்பு இல்லாமல் செல்கிறது. இரண்டாம் பாதியாவது விறுவிறுவென்று செல்லும் என்று எதிர்பார்த்தால் இரண்டாம் பாதியில் நம்பத்தக்கதாக எதுவுமே இல்லாமல் கணிக்க கூடிய காட்சிகளாகவே அமைகின்றன.
படத்தின் பின்னணி இசை மிக அழகாக இருக்கிறது. அதற்கு காரணம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான்.
கடல் சார்ந்த படத்தில் ஒளிப்பதிவை இன்னும் அழகாக காட்டி இருக்கலாம் ஆனால் இந்த படத்தில் அந்த ஒளிப்பதிவு பெரிதாக இருக்கவே இல்லை இதற்கு முன்னால் வந்த நீர்ப்பறவை படமும் கடல் சார்ந்த ஒரு படம். அது போல் சிம்பு தேவன் படமான போட் படமும் கடல் சார்ந்த படம். இரண்டும் கடல் பகுதிகளை மிகவும் தத்ரூபமாக காட்டியிருந்தன. ஆனால் இந்த படத்தில் ஒளி அமைப்பு காட்சிகள் மிஸ்ஸிங்.
இந்த படம் GV பிரகாஷ் குமாருக்கு 25வது படம் மற்றும் அவருடைய தயாரிப்பில் வெளிவரும் முதல் படம். இப்படி பல முக்கியமான முடிவுகளை ஜிவி பிரகாஷ் எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஜிவி பிரகாஷ் இந்த கதை தேர்வையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்து தேர்ந்தெடுத்திருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் கிங்ஸ்டன் படம் ஜிவி பிரகாஷ்க்கு ஜோக்கர் படம் போல் ஆகிவிட்டது.