Max திரை விமர்சனம்.

கிச்சா சுதீப், ஆடுகளம் நரேன் இளவரசு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

நேர்மையான போலீஸ்காரராக இருக்கும் கிச்சா சுதீப் மாற்றுதல் ஆகி இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். பதவியேற்பதற்கு முன்னதாகவே அமைச்சரின் மகன்கள் ட்ரங்க் அண்ட் டிரைவ் கேசில் மாட்டி விடுகிறார்கள். அதனால் கிச்சா சுதீப் அவர்களை ஜெயிலில் அடைத்து விடுகிறார். ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் திடீரென ஒரு பணி வந்த வேளையில், திருப்பி வந்து பார்க்கும் பொழுது அவர்கள் இருவரும் இறந்து கிடக்கின்றனர்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த போலீசாருக்கு கிச்சா சுதீப் உதவுகிறார் இதனால் என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை ஆக்சன் பாணியில் சொல்லி இருக்கும் படம்.

கிச்சா சுதீப் மாஸ் வேல்யூ காட்டுகிறார். ஆக்சன் மற்றும் சண்டைக் காட்சிகளில் தனி தோனியை வெளிப்படுத்தி இருக்கிறார். இளவரசு நடிப்பில் மிரட்டி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக நேர்த்தியாக உள்ளது.

இந்தப் படம் 1976 இல் வெளியான Assault on precinct 13 என்கிற ஆங்கிலப் படத்தின் தகவல். இதே படத்தை தழுவி தான் தமிழில் லோகேஷ் கனகராஜ் கைதி என்ற படத்தை எடுத்தார். ஆனால் எந்த ஒரு விதத்திலும் கைதி படத்தின் சாயல் வந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இயக்குனர் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளும் சரி இசையும் சரி சண்டை காட்சிகளும் சரி புல்லரிக்கும் விதமாக உள்ளது.

ஆக மொத்தத்தில் max படம் உண்மையிலேயே மேக்சிமம் கமர்சியல் கொண்ட ஒரு படம்.