அல்சன் பால், ரெபொ ஜான் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஊதாரியான இளைஞராக இருக்கும் அல்சன் பால், ரெபோஜானை காதலிக்கிறார். அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாத ரெபொ ஜான் ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ள முற்படும்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்து விடுகிறது. இந்த விபத்து அவர்களுக்குள் மீண்டும் ஒரு காதலை மலர வைக்கிறது. இதனால் இருவீட்டாரும் அவர்களை விரட்டி அடித்து விடுகின்றனர் மீண்டும் இவர்கள் வாழ்க்கையில் ஜெயித்தார்களா..? இல்லையா..? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
இயக்குனர் வெறும் கிளைமாக்ஸ் காட்சியை மட்டுமே நம்பி இந்த கதையை எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் மற்ற காட்சிகள் அனைத்தும் வழக்கமான படத்தில் வரும் காதல் காட்சிகள் மட்டுமே.
நடிப்பில் அனைவரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் வசனம் அதற்கு கை கொடுக்கவில்லை. அனைத்தும் எதார்த்தமான வசனங்களாகவே உள்ளன.
ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்திருந்தாலும், அதற்கு ஏற்ற திரைக்கதை இல்லை.
ஆக மொத்தத்தில் மழையில் நனைகிறேன் என்னதான் மழையில் நனைந்து படம் பார்க்க வந்தாலும் படம் ஓடுமா என்பது சந்தேகமே!