குணாநிதி, செம்பன் வினோத் கொற்றவை, காளி வெங்கட் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்.
தமிழ்நாடு கேரளா எல்லையில் நடக்கும் கதையாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது.
மலைக்காட்டு மக்களின் கதாநாயகனாக இருக்கும் குணாநிதி, தன் முதலாளியின் வீட்டில் இறந்து போன நாயை புதைக்கும் போது அது உயிர் பிழைக்கிறது. அதை மிகவும் பாசமாக எடுத்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக கேரளாவில் பண்ணை வேலைக்கு செல்கிறார். அப்போது அந்த நாயும் கூடவே எடுத்துச் செல்கிறார்.
அதே நேரத்தில் கேரளாவில் நகரமன்ற உறுப்பினராக இருக்கும் செம்பன் வினோத் தன் மகளே உலகம் என்று வாழ்கிறார். அந்த மகளின் பிறந்த நாளின் போது ஒரு நாய், அவரது மகளை கடித்து விடுகிறது. இதனால் கடுப்பான செம்பண் வினோத் அந்த ஊரில் இருக்கும் ஒரு நாயை கூட விடாமல் அனைத்தையும் கொன்று விடுகிறார் அப்பொழுது கதாநாயகன் குணாநிதி நாயையும் கொல்லப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதை தட்டிக் கேட்கும் போது செம்பண் வினோத்தின் வலது கையாக இருக்கும் அப்பானி சரத்தின் கையை வெட்டிய விடுகிறார். இதனால் கடுப்பான அந்தக் கூட்டம் குணாநிதி மற்றும் அவரது நண்பர்களை வலை வீசி தேடுகிறது இதிலிருந்து தப்பித்தார்களா..? அந்த நாயை காப்பாற்றினார்களா என்பது தான் படத்தின் மீதி கதை.
ஒரு வித்தியாசமான கதையை எடுக்க முயற்சித்து இருக்கிறார்கள் படம் குழுவினர் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
கதை சொல்லும் அளவிற்கு எதார்த்தமாக இருந்தாலும் எடுத்த அளவில் திருப்தி இல்லை. ஒரு நாயை வைத்து கதை என்பதனால் அந்த நாய் சார்ந்த கதையாக இல்லாமல் சுற்றி நடப்பதனால் நாய்க்கு நடக்கும் சம்பவமாகவே இந்த கதை மாறி உள்ளது. ஆக மொத்தத்தில் திரைக்கதை தெளிவாக இல்லை என்பது தான் உண்மை.
படத்தின் இசை பெரிதாக ஈர்க்கவில்லை என்பதும் கூடுதல் உண்மை.
நடிப்பில் செம்பண் வினோத் கொற்றவையை தாண்டிலும் குணாநிதியின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த கதாபாத்திரம் ஜொலிக்கிறது.
ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக இருகிறது.
ஆக மொத்தத்தில் அலங்கு படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வித்தியாசமான படம்.