‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு: சந்தீப் கிஷன் புதிய அவதாரம்!

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில், இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘பவர் பேட்டா’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்த படம், தொடக்கத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காதல்–கௌரவம்–அரசியல் மோதல்களை மையமாகக் கொண்ட தீவிரமான கதைக்களம் இந்த படத்தில் இடம்பெறவுள்ளது. ரத்தம் படிந்த சதுரங்க பலகை உள்ளிட்ட சின்னங்களால் உருவாக்கப்பட்ட டைட்டில் போஸ்டர், அதிகாரப் போட்டி, வியூகம் மற்றும் தியாகத்தை சுட்டிக்காட்டி படத்தின் திசையை வெளிப்படுத்துகிறது.

சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையில் புதிய பரிமாணத்தை காட்டும் வகையில் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மணி ஷர்மா இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மேற்கொள்ளும் இப்படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.