நயன்தாரா தனுஷ் வழக்கு: இறுதி கட்ட விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கிறது!

‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரூ.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், திருமண ஆவணப் படத்தை வெளியிடக் கூடாது எனவும் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது, அதில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் மற்றும் பாடலைப் பயன்படுத்த ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக தனுஷ் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மனுக்கள் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு ரூ. 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.