ராமம் ராகவம் திரை விமர்சனம்

சமுத்திரக்கனி, தன்ராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தெலுங்கு  படம் ஆனால் தமிழ் டப்பிங்.

 பிள்ளை மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் அப்பாவான சமுத்திரக்கனி, அப்பாவின் மீது கொலை வெறி அளவுக்கு கோபத்தை வைத்திருக்கும் தன்ராஜ். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உறவு சார்ந்த கதை தான் இந்த ராமம் ராகவம்.

 நடிகர் தன்ராஜ் தெலுங்கில் ஒரு மிகப்பெரிய காமெடி நடிகர் பெரிய எழுத்தாளர் என்று மட்டுமே தெரியும் ஆனால் இந்த படத்தில் அவர்களின் நடிப்பு அற்புதமாக உள்ளது. சமுத்திரகனியின் நடிப்பு பிரமிப்பாக உள்ளது. ஹரிஸ் உத்தமன் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் பண்ணி இருக்கார். மிகவும் சிறப்பாக உள்ளது.

 படத்தின் திரைக்கதை  ஒவ்வொரு கட்டத்திலும் தன்ராஜ் செய்யும் தவறுகளின் மூலம் விறுவிறுப்பை கூட்டிக் கொண்டே செல்கிறது. சமுத்திரக்கனி அதற்கு இணையாக பாசத்தை காட்டுவது இன்னும் அழகு சேர்த்திருக்கிறது.

 படத்தின் இசையும் ஒளிப்பதிவும் இந்த படத்திற்கு கூடுதல் பலம்.

 கதாநாயகியை மட்டுமே வைத்து கதையை பின்னாமல் அப்பா மகன் பற்றிய உறவைப் பற்றிய பேசி இருப்பது ஒரு அற்புதமான திரைகதைக்கு உதாரணம்.

 ஆக மொத்தத்தில் இந்த ராமம் ராகவம் படம், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் டான் படங்களை ஞாபகப்படுத்தினாலும், இந்தப் படம் பிடிக்கும்.