மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் திரைப்பட நடிகை மும்தாஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது, “என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னை நிறைய பேர் திட்டி இருப்பீர்கள். நிறைய பேர் துவா செய்திருப்பீர்கள். உண்மைதானே?” என கண்ணீர் மல்க கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று உங்கள் முன்னே இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. இதற்கு முன் நான் வெளியே சென்று கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் பெண்கள் என்னை பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தம் அளிக்கும்.
ஆனால் இப்போது உங்கள் முன் இப்படி நிற்பது சந்தோஷமளிக்கிறது. எனது வாழ்க்கையில் எது சரி எது தவறு என தெரியாமல் இருந்து விட்டேன். தவறு செய்ய வேண்டுமென எனது தலையில் எழுதி இருந்தது. அந்த நேரத்தில் இது போன்ற மதரஸா (பெண்கள் பள்ளி) இல்லை. இருந்திருந்தால், சினிமாவில் நடிக்க சென்றிருக்க மாட்டேன்” என கவலையாக தெரிவித்தார்.
https://x.com/News18TamilNadu/status/1893471258316284146?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1893471258316284146%7Ctwgr%5E166c47c15b4f9a59a3cea18f01891651b51d4236%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
மேலும், “நான் நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு. இங்கு வந்து உங்களை பார்த்த பிறகு நீங்கள் எனக்கு அன்பும் ஆதரவும் தருவது சந்தோசமளிக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.