அறிமுக நாயகன் பவிஷ்,அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், இன்னும் பல இன்ஸ்டாகிராம் பிரபலங்களுடன் இயக்குனர் தனுஷ் இயக்கி வெளியாகி இருக்கும் படம்.
கதைப்படி பவிஷ்க்கு ஒரு பெண் பார்க்கிறார்கள் அந்த பெண்ணான பிரியா பிரகாஷ் வாரியரிடம் பவிஷ் தன்னுடைய பழைய காதலைப் பற்றி பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பழைய காதலிக்கு கல்யாணம் என்ற ஒரு விஷயத்தையும் கூறுகிறார். அந்த நேரத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் அந்த கல்யாணத்துக்கு பவிஷை போய் பார்த்துவிட்டு வரும்படி அனுப்புகிறார். இறுதியில் அவருடைய காதலி அனிகா சுரேந்திரனுக்கு திருமணம் நடந்ததா அல்லது இவருடைய காதல் ஜெயித்ததா என்பது தான் படத்தின் கதை கூறு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா வின் குஷி படத்தை பார்த்த ஒரு ஃபீல் இந்த படத்தை பார்த்தால் தோன்றும்.
அறிமுக நாயகன் பவிஷ் தனுஷின் அக்கா பையன் என்பதால், தனுஷ் எப்படி எல்லாம் நடிப்பாரோ அதை கொஞ்சம் கூட பிசிரு தட்டாமல் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார். அனிகா சுரேந்திரனின் நடிப்பு அட்டகாசம். பவிஸ்ன் நண்பனாக வருபவர்களின் நடிப்பும் ஒரு படி கூடுதல். சரண்யா பொன்வண்ணன் ஆடுகளம் நரேன் அற்புதமான அப்பா அம்மா நடிப்பிற்கு பொருந்தி உள்ளனர்.
படத்தின் திரைக்கதை எந்த தொய்வும் இல்லாமல் அடுத்த காட்சி என்ன அடுத்த காட்சி என்ன அடுத்த காட்சி என்ன என்று விறுவிறுப்பாகவும் அதே போல் பயங்கர பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.
படத்தின் அடுத்த கூடுதல் பலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. ஜீவி பிரகாஷ் நடிக்காமல் இப்படி இசையமைத்தாலே போதும், இந்நேரம் பத்து பதினைந்து தேசிய விருதுகளை வாங்கி இருக்கலாம்.
ஒளிப்பதிவு இந்த படத்திற்கு பெரிய பலம்.
படத்தின் இயக்குனர் தனுஷ் பற்றி பேசியே ஆக வேண்டும். இதற்கு முன்னால் ராயன் படத்தில் என்ன மாதிரி படம் எடுத்து வைத்திருக்கிறார் என்று யோசிக்க வைத்த தனுஷ், இப்போ எப்படி எல்லாம் இவ்வளவு பிரமிப்பாக படம் எடுத்து வைத்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதிலும் படத்தின் பிரம்மாண்டமான செட்டுகள் அதில் உள்ள கற்பனை வடிவங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
சரத்குமார் சிறிது காட்சியே வந்தாலும் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார்.
ஆக மொத்தத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 2k பசங்களுக்கான அமர காவியம்.