பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன், மரியம் ஜார்ஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
பள்ளிக்கூடத்தில் நல்ல பையனாக 96 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற பிரதீப் ரங்கநாதன், ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அவரோ படித்த பயனை எனக்கு பிடிக்காது, கெத்தா இருக்கிற பையன தான் பிடிக்கும் என்று இவருடைய காதலை உதறித் தள்ளுகிறார். இதனால் கல்லூரியில் படிக்கும் போது இவர் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கெத்தாக சுற்ற வேண்டும் என்று இருக்கிறார். அதனால் 48 அரியர் வைக்கிறார். பிறகு கல்லூரியை விட்டு வேலைக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி வேலைக்கு செல்லாமல் நண்பர்கள் வீட்டில் குடியும் குடித்தனமுமாக பொறுப்பில்லாமல் சுற்றுகிறார். இதனால் தன்னுடைய கல்லூரிக் காதலியான அனுபமா பரமேஸ்வரனும் விட்டுச் செல்கிறார். இதை முனைப்பாக எடுத்து ஒரு வேலைக்கு கோல்மால் செய்து சேர்கிறார். இந்த கோல்மால் வேலையில் இருந்து இவர் மாற்றினாரா தப்பித்தாரா இவருடைய வாழ்க்கை தத்துவம் என்ன என்பதை பற்றி கூறும் கதை தான் இந்த டிராகன் படம்.
படத்தின் கதை ஏற்கனவே வந்த டான் படத்தின் தழுவலை போல் இருக்கலாம். முதல் பாதி கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் தான் கதையும் நகரும். ஆனால் இரண்டாம் பாதி முற்றிலும் வேறு விதமான திரைக்கதையை கொடுத்திருக்கிறது.
பிரதீப் ரங்க நாதனின் நடிப்பில் அங்கங்கே தனுசும் எட்டிப் பார்க்கிறார், கொஞ்சம் கரெக்ட் பண்ணி இருக்கலாம். மிஷ்கின் ஒரு படி மேலே போய் தன்னுடைய நடிப்பின் உச்சத்தை காட்டி இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மரியம் ஜார்ஜ் எப்பொழுதும் போல் இந்தப் படத்திலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு மிக பிரம்மாண்டமாக உள்ளது. காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது.
அதேபோல் இசையும் படத்திற்கு ஒரு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் பொழுது ஒரு ஆட்டிட்யூடன் தான் பேசுவார். ஒருவேளை படமும் அப்படித்தான் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் போய் பார்த்தால், அது முற்றிலும் வேறு ஒன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
ஆக மொத்தத்தில் டிராகன் படம் அனைவருக்கும் பிடித்தமான படம்.