ரெட்ரோ படத்தின் முதல் பாடல் எப்பொழுது வெளியாகிறது?

நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.

ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே. 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று பிப். 14 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.