சமுத்திரகனி நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கிய ராமம் ராகவம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.

ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றன.

இப்படம் பிப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப். 21 ஆம் தேதியே வெளியாகும் என புதிய தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.