தண்டேல் திரை விமர்சனம்

நாக சைதன்யா, சாய் பல்லவி, ஆடுகளம் நரேன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் தெலுகில் உருவாகி தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டிருக்கும் படம் தண்டேல்.

 ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

 கதைப்படி நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் சிறு வயதிலிருந்து நண்பர்கள், நல்ல காதலர்கள். ஒருவருக்கொருவர் உயிராய் நேசித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த ஊரில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்பது மாதங்கள் குஜராத்தில் உள்ள கடற்படைக்கு சென்று மீன் பிடித்து வருவதும் மூன்று மாதம் கரையில் அவர்கள் கிராமத்தில் சந்தோஷமாக இருப்பதும் என்று வாழ்க்கை கழிகிறது. இந்நிலையில் சாய் பல்லவி ஒரு தடவை வற்புறுத்தியும் பேச்சைக் கேட்காத நாகசைதன்யாவும் அவரது கூட்டாளிகளும் பாகிஸ்தான் கடல் எல்லையை கடந்து சென்றதால் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சாய்பல்லவி எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

 முழுக்க முழுக்க வணிக ரீதியான தெலுங்கு படம். ஆனால் காதல் காட்சிகள் அனைத்தும் மனதை கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. அமரன் படத்திற்குப் பிறகு சாய் பல்லவியின் இந்த நடிப்பு தெலுங்கு திரை உலையில் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மை. நாக சைதன்யா நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேறி இருக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரித்திவிராஜ் பப்லுவை படத்தில் பார்த்தது ஒரு பெரும் ஆனந்தம்.

 படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை சொல்லவே வேண்டாம் சாய் பல்லவி நடனம் அருமையோ அருமை. ஒளிப்பதிவு சூப்பர்.

 திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திருக்கலாம். முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதி இன்னும் மெதுவாகச் செல்கிறது. ஆனால் படம் மிகவும் சலிப்பைத் தட்டவில்லை என்று சொல்லலாம்.

 ஆக மொத்தத்தில் தண்டேல் படம் ஒரு தடவை பார்க்கக்கூடிய நல்ல படம்.