ஜெய்பீம் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த லிஜோமோல், காதல் என்பது பொதுவுடமை படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வரும் காதலர் நாளன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது.
இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி வழங்குகிறார். ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் லென்ஸ், மஸ்கிடோ ஃபிலாஸபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.