சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிந்திருந்த இந்த படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கின.
3 ஆண்டுகளாக படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ரீலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 படம் டிசம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அது பாக்ஸ் ஆபீஸ்ல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புயலை கிளப்பி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்த படம் தற்போது மற்றொரு சாதனையை படைத்துள்ளது. புஷ்பா 2 படம் இரண்டே நாளில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூல் செய்தது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படம் மொத்தம் ரூ.440 கோடி வசூல் ஆகும். ஆனால் புஷ்பா வெளியாகி 2 நாட்களிலேயே ரூ.449 கோடி செய்து கோட் படத்தின் லைஃப்டைம் வசூலை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.