ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், இந்தியாவின் சிறந்த நடிகர்கள் நடிகைகள் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் யார் யார் என்பதை வெளியிடுவது வழக்கம். இதை ஒவ்வொரு ஆண்டும் படத்திற்கு ரேட்டிங் செய்யும் நிறுவனமான IMDB நிறுவனம் கடைப்பிடிப்பதுண்டு.
இதன் அடிப்படையில் “Most Popular Stars of 2024” என்ற பட்டியலை IMDb நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
“Most Popular Stars of 2024” பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் “அனிமல்” படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை த்ரிப்தி டிம்ரி. இரண்டாம் இடத்தை பிரபல நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார்.
ஷாருக்கான் 4வது இடத்திலும், நாகசைதன்யாவின் 2வது மனைவி சோபிதா 5வது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் 7ம் இடத்திலும் உள்ளார். பாலிவுட் பிரபலம் ஆலியா பட் 9வது இடத்திலும், தெலுங்கு ஸ்டார் நடிகர் பிரபாஸ் 10வது இடத்திலும் உள்ளனர்.
https://www.instagram.com/p/DDLus4KIlW4/?igsh=MW9tZDBkcWE5dXFkMw==
இந்த பட்டியலில் ஒரே ஒரு தமிழ் பிரபலம் இடம்பிடித்துள்ளார், அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை சமந்தா தான். IMDb வெளியிட்டுள்ள “Most Popular Stars of 2024” பட்டியலில் 8வது இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார்.