ரஜினி பிறந்தநாளுக்கு வெளியாகிறது மழையில் நனைகிறேன் படம்!

தமிழ் சினிமாவில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் அன்சன் பால்.

இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’.

ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரிப்பில் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார்.

காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து இயக்குனர் டி.சுரேஷ்குமார் பேசுகையில், “மழைக்கும் இந்த கதைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

மழை ஒரு கதாபாத்திரமாகவே வரும். மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடியும். அதனால்தான் இந்தபடத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது. இதை ரஜினியே வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.