விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன்!

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்க, அவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று திரைப்பட இயக்கம் தொடர்பாக சில படிப்பையும் பயின்றிருந்தார். அவர் இயக்கிய குறும்படமும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு சூழலில் தமிழில் ஒரு புதிய திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், இதில் நடிகராக யார் நடிப்பார்கள் என்பது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளிப்படுத்தாமல் இருக்க தற்போது இதுபற்றி உறுதியான தகவல்களும் கிடைத்துள்ளது. லைகா நிறுவனம் இது தொடர்பாக மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் எடிட்டராக பிரவீன் K. L ம் , இசையமைப்பாளராக தமனும் பணிபுரியவுள்ளது உறுதியாகி உள்ள நிலையில், படக்குழுவினர் தொடர்பான மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.