ஹிந்தி நடிகர் அர்ஜுன் கபூர் உடன் சமந்தா காதலா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பாலிவுட் சினிமா விலும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடர் நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ள சமந்தா தற்போது பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனனான அர்ஜுன் கபூர் ஹிந்தி சினிமாவில் நடித்து வரும் நிலையில் இவர் அவரை விட மூத்த நடிகையான மலைக்கா அரோராவை காதலித்து வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு நடிகர் அர்ஜுன் கபூர் இந்த கவிதை என் வீட்டில் சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக பதிவு செய்தார். இதற்கு சமந்தா ஹார்ட்டினை பறக்க விட்டார். இதன் காரணமாக இருவரும் காதலித்து வருவதாகவும் சமந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதால் தான் அர்ஜுன் கபூர் மலைக்கா அரோராவை கழட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுக்கு அடுத்த மாதம் சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது சமந்தா மற்றும் அர்ஜுன் கபூர் காதல் குறித்த செய்திகள் தீயாக பரவி வருகிறது.