A R ரஹ்மான் ஒரு குழந்தை தெரியுமா?

ஏ. ஆர். ரஹ்மானின் மனைவியான சாய்ரா, தன்னுடைய கணவரை பிரிவதாக கூறி, தன்னுடைய வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இது அடங்கி முடிவதற்குள், ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய கிட்டாரிஸ்ட் மோகினி தன்னுடைய கணவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவ்வளவுதான், இவரையும், ரஹ்மானையும் இணைத்து வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனை ஏ.ஆர். ரஹ்மான் மகன் உட்பட பலர் கண்டித்து பதிவுகளை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ஏடிகேவும் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி ஒரு மனிதனை என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்ததே கிடையாது. அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையே கிடையாது. அவருடைய பர்சனல் லைஃபுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

ஆனாலும் சொல்கிறேன்; தற்போது ஏ ஆர் ரஹ் மான் குறித்து வெளிவரும் வதந்திகள் பணத்திற்காகவும், பிரபலத்திற்காகவும், பரப்ப படுகிறது. ஆகையால் அதை எல்லாம் நம்பி கமெண்டுகளில் ஏ ஆர் ரஹ்மான் சாரை தாக்கி பேசுவது போன்றவற்றை செய்யாதீர்கள் என்று நான் சொல்ல முடியாது; அது உங்களுடைய இஷ்டம்; ஆனால், நான் இப்போது சொல்கிறேன். அவர் அவருடைய டெக்னீசியன்களை, அவரிடம் பணியாற்ற வருபவர்களை ஒரு கடவுள் போல நடத்துவார் அப்பேர்பட்ட மனிதனை நாம்…

அவர் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்பது இங்கு முக்கியமில்லை. அவர் எவ்வளவு ஒரு குழந்தைத்தனமான மனிதர் என்பது எங்களுக்கு தெரியும் எங்கள் சாரை பற்றி எங்களுக்கு தெரியும்” என்று பேசி இருக்கிறார்.