டிசம்பரில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் : தந்தை உறுதி!

கீர்த்தி சுரேஷின் தந்தையான ஜி சுரேஷ் குமார், தனது மகள் நவம்பர் 25ஆம் தேதி ஆண்டனியுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருப்பதையும், அவர்கள் திருமணம் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் நடைபெற இருப்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு 32 வயதாகிறது. இவர் இவருடைய 15 ஆண்டுகால நண்பரையே கரம் பிடிக்க உள்ளதாக இவருடைய தந்தை தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், கொச்சியைச் சேர்ந்த ஆண்டனி, தோஹாவில் தொழிலதிபராக பணியாற்றி வருகிறார்.

கீர்த்தியின் பெற்றோரான தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் முன்னாள் நடிகை மேனகா, இவர்களின் காதலுக்கு முழு ஒப்புதலை அளித்துள்ளனர்.

திருமணத்தில் மதக் கருத்து வேறுபாடுகளால் பிரச்சனை ஏற்படுமோ என்ற பயம் ஆரம்பத்தில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கீர்த்தி சுரேஷின் கணவராக வரப்போகிறவர் கோவில்களுக்கு செல்லும் பாரம்பரிய நம்பிக்கையுடன் இருக்கிறார், ஆனால் கீர்த்தி மதம் மாற விரும்பவில்லை. திருமணம் எந்த ஒரு மதச் சடங்குக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் நடைபெறும், அல்லது தேவைப்பட்டால் இரு மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

கீர்த்தி மற்றும் ஆண்டனி இருவருக்கும் தாய்லாந்தில் திருமணம் நடைபெற வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தங்களுடைய திருமணத்தை கோவாவில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.