ஊர்வசி,அசோக் செல்வன், படுவா கோபி, அழகம்பெருமாள் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் அடித்துத் போட்ட ஒரு கதையைத்தான் இந்தப் படத்திலும் எடுத்திருக்கிறார்கள்.
அசிஸ்டன்ட் டைரக்டராக வரும் அசோக் செல்வன், கண்டவுடன் காதலைப் போல் ஒரு நர்ஸ் பெண்ணை காதலிக்கிறார். வழக்கம்போல் அசோக் செல்வனுக்கு கூட இருக்கும் பெண் தோழியால் ஒரு பிரச்சனை வருகிறது. இதனால் அவர்களின் காதல் பிரேக் அப் ஆகிறது. ஆனாலும் இவர்கள் சேர முற்படுவதற்குள் அடுத்தடுத்து வெவ்வேற பிரச்சனைகள் பல ரூபங்களில் வருகின்றன. இதையெல்லாம் அசோக் செல்வன் எப்படி முறியடித்தார், மீண்டும் அவர்கள் எப்படி கைகோர்க்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.
ஊர்வசி தவிர இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரின் நடிப்பும் வெறும் சுமார் ரகம் தான். ஊர்வசி தனக்கே உரிய வெள்ளந்தி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார். அழகம்பெருமாள் அடுத்த வினு சக்கரவர்த்தி போல் நடித்திருக்கிறார். மற்றபடி நடிகர்கள் பட்டாளம் அதிகம் இருந்தாலும், நடிப்பு துளிகூட இல்லை.
படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நகைச்சுவை காட்சிகளைத் தவிர படத்தில் வேறு எங்கும் நகைச்சுவை என்ற ஒன்று இல்லவே இல்லை.
வழக்கமான திரைக்கதை தான் என்பதால் படம் பார்க்கும்போதே சலிப்பு தட்டுகிறது.
படத்தின் பாடல்களும் ஜொலிக்கும்படியாக இல்லை.
இப்படி திரைக்கதை, பாடல்கள் என்று அனைத்தும் ஜொலிக்காமல் போவதால் ஒளிப்பதிவு பேசப்படாமலே போய்விட்டது.
ஆக மொத்தத்தில் எமக்குத் தொழில் ரொமான்ஸ், அதர பழைய படம் என்பது மட்டுமே நிஜம்.