நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இயக்கி தயாரித்து வெளியிட்டிருக்கும் படம்.
மலையாளத்தில் பிரபலமான நடிகரான இவர் தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். தற்பொழுது கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு பணக்கார Gangster ன் மனைவியை, இரண்டு ஏழை இளைஞர்கள் கெடுத்து விடுகின்றனர். அவர்களை இவர்கள் தேடும் போது நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.
ஜோஜூ ஜார்ஜ் பிரேமில் மிரட்டுகிறார். அபிநயா தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை ஏற்கனவே ஈர்த்துள்ளார் என்பது தெரியும். இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களையும் ஈர்ப்பார் என்பது உண்மை. படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் மிரட்டுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வில்லன்களாக வரும் இரண்டு இளைஞர்களை பார்த்தால் நமக்கே பயம் வரும்.
நேர்த்தியான திரைக்கதையால் படத்தில் காட்சிகளை விட்டு வேறு எங்கும் மனசு அலைபாய வில்லை.
நேர்த்தியான இசை படத்தை இன்னும் கூடுதல் கவனம் பெறச் செய்கிறது.
படம் கேரளாவில் உள்ள திருச்சூரில் மட்டுமே நடப்பதால், ஒளிப்பதிவாளர் அந்த ஊரின் கலாச்சாரத்தை மட்டுமல்லாமல், ஊரையே மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் இன்னும் சொல்லப் போனால் பிரம்மாண்டமாகவும் காட்டியிருக்கிறார்.
படத்தில் வசனங்கள் அதிகம் இல்லை. ஆனால் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கூடுகிறது.
படத்தின் ஆக்சன் காட்சிகள், பிரம்மாண்டத்தை மட்டுமே காட்டாமல், மிக நேர்த்தியான சண்டைக் காட்சிகளாக எடுத்திருப்பது கூடுதல் பலம்.
இந்தப் படத்தின் குறையாக பார்க்கப்படுவது என்னவென்றால், தமிழில் ஏற்கனவே வெளிவந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் சாயலை கொண்டுள்ளது போல் நமக்கு தோன்றும். ஆனால் திரைக்கதை வடிவம் வேறு. ஆங்காகே கதைக்கு லீட் கொடுக்கும் விதத்தில் லாஜிக் மீறல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதைக் கடந்து தான் செல்ல வேண்டி இருக்கிறது.
ஆக மொத்தத்தில் பணி படம் விறுவிறுப்பான திரைக்கதைக்காக பார்க்கக்கூடிய ஒரு படம்.