ஜாலியோ ஜிம்கானா – திரை விமர்சனம்.

பிரபுதேவா, அபிராமி, யோகி பாபு, மடோனா செபாஸ்டியன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான மகளிர் மட்டும் படத்தில் வரும் நடிகர் நாகேஷின் காட்சிகளை எடுத்து, மசாலா கஃபே படத்தின் திரைக்கதையை உல்ட்டா செய்து ஒரு கலவையாக கொடுத்தால் அந்தப் படத்தின் பெயர் ஜாலியா ஜிம்கானா.

படத்தில் புதிதான விஷயங்கள் என்று சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே இல்லை.

யோகி பாபு, மடோனோ செபாஸ்டியனிடம் பேசும் பொழுது, ” நீ சொல்லும் இந்த கதை முழுவதும் சரியில்லை.. சரியில்லை.. சரியில்லை என்று சொல்லிக் கொண்டே போகிறார். அவரே உண்மையை சொன்னதுக்கு பிறகு நாங்கள் என்ன அதை விமர்சனம் செய்ய!

அழுத்தம் இல்லாத கதை, கொஞ்சம் கூட விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை, கிட்டத்தட்ட மன அழுத்த நிலைக்கு வந்திருக்கும் நான்கு கதாநாயகிகள், அவர்களுக்குள் காட்டப்பட்டிருக்கும் அபத்தமான திறமைகள் என்று படம் முழுவதும் அபத்தமான காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.

படத்தின் பாடல்கள் ஈர்த்த அளவுக்கு இசை ஈர்க்கவில்லை..

ஆக மொத்தத்தில் ஜாலியா ஜிம்கானா என்ற படத்தின் தலைப்புக்கும், படத்தின் கதைக்கும் துளியும் சம்பந்தமில்லை.

இதன் பிறகு அந்தப் படத்தின் ஒளிப்பதிவு வசனம் பற்றி பேசி என்ன பயன்?