சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப் பிரமாண பட்ஜெட்டில் K. E. ஞானவேல் ராஜா எடுத்திருந்த படம் தான் கங்குவா.
இந்தப் படத்தின் பிரமோஷன் போது ஞானவேல் ராஜா, கங்குவா படம் 2000 கோடி வரை லாபம் ஈட்டும் என்றும், நேரு உள் விளையாட்டரங்கில் இந்த படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்ற போது அந்த Entry pass ஐ,அப்படியே வைத்திருங்கள் மீண்டும் வெற்றி விழாவில் இங்கு, விநியோகஸ்தர்களோடு உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் படம் திரையிடப்பட்ட முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய எதிர்மறை விமர்சனங்களைத் தான் சந்தித்தது, அதுமட்டுமில்லாமல் படத்தின் முதல் அரை மணி நேர காட்சிகள் யாரையும் கவனம் ஈர்க்காமல் இருந்தது என்று ஜோதிகாவே கூறியிருந்தார். பல விமர்சகர்கள் இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் தந்த நிலையில், மக்களும் இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை தந்ததால் கங்குவ படம் பெரிதாக லாபம் ஈட்ட வில்லை என்றே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இன்னும் ஒரு சில தரப்பினரோ இந்த படத்திற்கு K E ஞானவேல் ராஜா கொடுத்த over hype தான் படத்தை தோல்வி அடையச் செய்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இதனால் ஏற்கனவே ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவிக்கும் K E ஞானவேல் ராஜாவிற்கு அடுத்து ஒரு சிக்கல் வர காத்திருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 350 கோடி வரை இந்த படத்திற்காக பட்ஜெட் செலவிடப்பட்டிருக்கிறது. தற்போது விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஞானவேல் ராஜா கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. 2000 கோடி வரும் என்று எதிர்பார்த்த ஞானவேல் ராஜாவிற்கு நூறு கோடி ரூபாய் கடனாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற பேரிடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து K E ஞானவேல் ராஜா தப்பிப்பது கடினம் என்றும் கூறுகின்றனர், மேலும் இவரது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படமான ‘வா வாத்தியார்’ படத்திற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.