தமிழ் சினிமாவில் வெளியான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில், ஓரளவு மிகப்பெரிய வெற்றியை எடுத்திருக்கும் படம் அமரன்.
இந்தப் படத்திற்கு பக்க பலமாக இருந்தது சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பு. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சாய்பல்லவி தன் நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தார்.
கங்குவா படம் ரிலீஸ் ஆன பிறகும் அமரன் படத்திற்கு இன்னும் சாரை சாரையாக மக்கள் கூட்டம் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 300 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இந்த படம் ஆந்திராவிலும் சக்கை போடு போடுகிறது. அங்கு மட்டுமே 40 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்தப் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி அனைவரும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
ஆனால் தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், சென்னை திரும்பியதும் அமரன் படத்திற்கான வெற்றி விழாவை ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான விழாவாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அந்த விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியவர்களை முக்கிய விருந்தாளிகளாக அழைக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஆக மொத்தத்தில் அமரன் படம் கொடுத்த வெற்றி சிவகார்த்திகேயனுக்கு அடுத்த உச்சத்தை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.