போதைப் பொருள் வழக்கில் துணை நடிகை கைது!

சின்னத்திரை துணை நடிகை மீனா, சென்னை அண்ணாசாலை பகுதியில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை மீனா “டெடி” உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை வேடங்களில் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு வாட்ஸாப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் மெத்தம்பட்டமைனை 2000 ரூபாய்க்கு வாங்கி 3000 ரூபாய்க்கு விற்று கைமாற்றி உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே போலீசார், மீனா எவரிடமிருந்து இந்த போதை பொருளை வாங்கி இருக்கிறார் என்று கோணத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.