மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் குறித்த கேள்விக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ”பாலிவுட்டில் சம்பளம் வாங்காத பல உதவி இயக்குநர்கள் எங்களிடம் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள். அதனால்தான் இங்கே ஒருவர் உதவி இயக்குநராக இருந்தால் அடுத்த படத்துக்கும் வருகிறார்கள்.ஏனெனில் இது மிகவும் நல்லது மற்றும் பாதுகாப்பானது.
ஆனால், தென்னிந்தியாவில் அவர்களுக்குத் தகுதியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்று தெரியவில்லை.எனவே, கடின உழைப்பாளிகளாக இருந்தும், திறமைசாலிகளாக இருந்தும், அவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்றார்.