தெறிக்கவிடும் கேம் சேஞ்சர் டீசர்?

ராம் சரணுக்கு இரண்டு கதாபாத்திரங்களா?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 டீசரை பார்க்கும் போது அரசியலை மையப்படுத்திய ‘பொலிட்டிக்கல் டிராமா’கதையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மேலும் ராம் சரணுக்கு இரண்டு கதாபாத்திரங்களா என்றும் சந்தேகிக்க வைக்கிறது.

 ஒரு பக்கம் காலேஜ் ஸ்டுடென்ட் ராம்சரணின் ஆக்ரோஷமும், இன்னொரு பக்கம் பஞ்சாயத்து தலைவர் ராம்சரணின் ஆக்ரோஷமும் என்ன இரண்டு கதாபாத்திரங்களில் பொளந்து கட்டி அடித்து இருக்கிறார் என்று யோசிக்க வைக்கிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சொல்லபோனால், இயக்குநர் ஷங்கர் மற்றொரு அரசியல் த்ரில்லர் படத்துடன் மீண்டும் வந்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும் இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட நான்கு வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி அன்று பொங்கல்  பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகிறது.