நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்தமாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் அதன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார்.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் அல்லது மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரில் ஒருவர் சூர்யாவிற்கு ஜோடியாகவுள்ளதாகவும் அதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் முக்கியமான கேரக்டரில் காஷ்மிரா பர்தேசி நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் கருப்பு என்று வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.