பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் கவின்!

பிக்பாஸ் 8, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டாக் லைனுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி.

கமல்ஹாசன் இருந்த இடத்தில் இவர் எப்படி இருக்கப்போகிறார், நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்ற பெரிய கேள்வி மக்களிடம் இருக்க மாஸ் காட்டி விட்டார் விஜய் சேதுபதி.

இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகிறார்கள் என்று தான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

கலவரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 8வது சீசன் வீட்டில் மாஸாக பட புரொமோஷனுக்காக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகர், இவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தான்.

பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின் தான் புதியதாக நடித்துள்ள ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திற்காக பிக்பாஸ் 8 வீட்டிற்குள் நுழைய இருக்கிறாராம். ரசிகர்களும் கவின் என்ட்ரிக்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.