அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது.

அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து, அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

https://x.com/BTGUniversal/status/1847601086238249467?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1847601086238249467%7Ctwgr%5Ed08c5849998e58ffd5ab88a177631961d43e574d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. தற்போது, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.