தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
கங்குவா படத்தை முடித்திருக்கும் சூர்யா இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். படத்தின் இன்ட்ரோ வீடியோவில் படு ஸ்டைலாக இருந்த சூர்யா இப்போது அதன் ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய வெற்றியடையும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது. அதனையொட்டி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான ஷூட்டிங் பல இடங்களில் முடிந்திருக்கிறது. அற்புதமான திறமையான படக்குழுவினருடன் ஏராளமான நினைவுகள் கிடைத்திருக்கின்றன. வாழ்நள் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் எனது சகோதரனாக உருவாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை தந்ததற்கு படக்குழுவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
