தளபதி விஜய்யின் 68வது படமாக வெங்கட்பிரபு இயக்கிய கோட் படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் துரித கதியில் நடந்து வருகிறது.
செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கும் படம் ரிலீஸாக உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளது. இந்தப் படத்திற்கு புதுவிதமாக ஒரு புரொமோஷனைக் கொடுக்க உள்ளார்கள் படக்குழுவினர்.
கோட் படத்துக்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சி இருக்குமா என்று கேள்வி எழுகிறது.
வாரிசு, துணிவு சமயத்தில் நடந்த ஒரு உயிர்ப்பலி தான் காரணம். சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர்ல ஒரு கலவரமே நடந்தது. சமூக ஆர்வலர்கள் பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் அந்த அதிகாலை காட்சியைத் தமிழக அரசு தடை செய்தது. கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சிக்கு கோட் படத்துக்கு ஸ்பெஷல் ஷோ ஆரம்பிக்குதாம். அவர்களுக்கு விஜய் படம் ரிலீஸ்னா ஓணம் பண்டிகை மாதிரியாம்.
தென்மாவட்டத்து ரசிகர்கள் கேரளாவுக்குப் போகத் தயாராக உள்ளார்களாம். வடமாவட்ட ரசிகர்கள் பெங்களூரு, ஆந்திரா என படையெடுக்கிறார்கள்.
தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு வாய்ப்பில்லை ராஜா என்றாகி விட்டது. படம் பார்த்த ஒருவர் அந்த விஜயை அவரது மனைவி சங்கீதாவே கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பிரமாதமா இருக்காராம். அதே மாதிரி விஜயகாந்த் ஏஐல வருவதால் அவரது ரசிகர்களும் முதல் காட்சியைப் பார்க்க தயாராக இருக்காங்களாம்.
கோட் படத்தின் 4வது சிங்கிள் கொண்டாடும் விதத்தில் இருக்குமாம். விஜய், திரிஷா ஆடிப் பட்டையைக் கிளப்பப் போகிறார்களாம். இது தான் படத்தின் மிகப்பெரிய புரோமோஷனாக இருக்குமாம். டெல்லி மெட்ரோ ரயில் முழுவதும் கோட் பட விளம்பரம் தெறிக்கவிடுகிறதாம்.