நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து சினிமா உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை விசித்திரா சினிமா உலகில் நடக்கும் அவலங்கள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகை குஷ்பூ, ஊர்வசி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பல நடிகைகள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை விசித்திரா இது பற்றி தன்னுடைய கருத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். விசித்திரா ஏற்கனவே தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது தெலுங்கு திரை உலகில் பெரிய நடிகர் ஒருவர் தனக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது விசித்திரா வெளிப்படையாக பேசி இருந்தார்.
இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு இதுகுறித்து சிலர் விமர்சனங்களும் செய்து வந்தனர். சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை விசித்திரா இப்போ எதற்கு பேச வேண்டும்? அவர் விளம்பரத்திற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்று கூட அவர் மீது குற்றம் சாட்டு வைத்தனர். இதனால் வருத்தத்தில் இருந்த விசித்திரா தன்னுடைய ஆதங்கத்தை இப்போது கொட்டி இருக்கிறார். பொதுவாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமா துறையில் பலருக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
டச்சப் அசிஸ்டன்ட் ஒரு பெண்ணா இருந்தா அவங்களுக்கும் மேக்கப் மேனால் இந்த பிரச்சனை வரலாம். அசிஸ்டன்ட் கேமரா வுமனாக இருந்தால் அவர்களுக்கு காஸ்டியூம் டிசைனர், டான்ஸர்ஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் என்று பலராலும் பிரச்சனை இருக்கிறது. சினிமாவில் பல பெண்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. பொதுவா பெண்டிங் பணம் வரல டப்பிங் பேச வரலைங்கற மாதிரியான பிரச்சனைகளுக்கு மட்டும் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் காஸ்டிங் கவுச்சிக்கு கொடுக்கறது இல்ல. யாராவது ஒரு நடிகை இதைப்பற்றி பேசினாலோ ஆதாரம் காட்டினாலும் கூட அதை காதும் காதும் வச்ச மாதிரி பேசி அப்படியே முடித்து விடுறாங்க. எல்லா காலத்திலேயும் இந்த பிரச்சனை நடந்துட்டு இருக்கு. அதோடு இந்த பிரச்சனையை சிலர் சமாளிக்கிறதுக்கும் பாக்குறாங்க.
இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதை ஏன் உடனே சொல்லவில்லை என்று சிலர் கேக்குறாங்க. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது அவர்கள் எப்படி அதை அந்த நேரத்தில் உடனே வெளிப்படையா சொல்ல முடியும். அதை தன்னுடைய குடும்பத்தில் சொல்லி அவர்களின் மனதை தைரியப்படுத்திய பிறகு தானே அதைப் பற்றி வெளியே பேச முடியும்.
ஆனால் சிலர் ஏதோ கருத்து சொல்ல வேண்டும் என்று எல்லாம் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பெரிய நடிகைகளுக்கு கேரவன் இருக்கு. ஆனால் டான்ஸ்ஸர்ஸ், சின்ன சின்ன நடிகைகளுக்கு ரெஸ்ட் ரூம் போவதற்கோ துணி மாற்றுவதற்கு கூட மறைவிடம் கிடையாது. மலையாள திரை உலகை புரட்டி போட்டு இருக்கிற ஹேமா கமிட்டி பல வருஷங்கள் கழித்து இந்த உண்மையை வெளியே கொண்டு வந்திருக்கு.
இதற்கு ரேவதி, பார்வதி போன்ற சீனியர் நடிகைகள் முயற்சி செஞ்சதால தான் இதுவும் நடந்திருக்கு. சண்டை பயிற்சி செய்கிறப்ப ஒருத்தருக்கு அடிபட்டா நடிகர் சங்கத்தில் இருந்து ஓடுறாங்க. ஆனா உங்க கூட வேலை பாக்குற நடிகைகளுக்கு பாலியல் பிரச்சனை வந்தால் ஏன் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய மாட்டேங்குறீங்க. இன்னைக்கு நடிகர் சங்கத்தில் பொறுப்புல இருக்குற விஷால், கார்த்தி மாதிரி இளைஞர்களாவது இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டணும்.
உங்களை தப்பா அப்ரோச் செய்தால் சங்கத்தில் வந்து புகார் கொடுங்கன்னு பெண்களுக்கு வெளிப்படையாக தைரியம் கொடுக்கணும். அது போல பெண்களுக்கு சம்பந்தப்பட்ட ஆண்கள் கிட்ட இருந்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தனும். இப்போ கஸ்தூரி, குஷ்பூ, லட்சுமி ராமகிருஷ்ணன், சின்மயி ன்னு நிறைய பேரு காஸ்டிங் கவுச்சிக்கு எதிரா தைரியமா பேசிட்டு இருக்காங்க. இவங்க எல்லாரும் ஒன்றா சேர்ந்து குரல் கொடுத்தா அந்த அணியில் நானும் சேர்ந்து கொள்வேன் என்று அந்த பேட்டியில் விசித்திரா கூறி இருக்கிறார்.