விஜய்யின் கோட் படத்தின் புதிய லுக் வெளியீடு : ரசிகர்கள் உற்சாகம்.

இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட நடிகர் விஜய், தற்போது தளபதியாக ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறது கோட் படக்குழு.


கோட் படத்தின் சென்சார் நிறைவு செய்யப்பட்டுள்ளது, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோக்களாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நீண்ட காலங்களுக்கு பிறகு கோட் படம் மூலம் விஜய்யுடன் இணைந்துள்ளார். படத்தின் பிஜிஎம் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக படத்தின் ட்ரெயிலரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் சேர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் கோட் படத்தின் அடுத்தடுத்த ஸ்டில்ஸ்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Happy weekend என்றும் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோஸ்களில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் காணப்படுகிறார். இவை அனைத்துமே மிக அழகாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. சில படங்களில் துப்பாக்கி ஏந்திய படி விஜய் மாஸ் காட்டியுள்ளார்.

முன்னதாக விஜய்யின் மகன் கேரக்டர் லுக் விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது அடுத்தடுத்து அப்பா மற்றும் மகன் கேரக்டர்களில் ரசிகர்களை கவரும் வகையில் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கோட் படத்தை தொடர்ந்து விஜய் தன்னுடைய தளபதி 69 படத்துடன் படங்களில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் கோட் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளன. விரைவில் தளபதி 69 படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.