கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்த கன்னட நடிகர்

நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் 2வது கட்ட சூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது.

கூலி படத்திற்காக மொத்தமாக ரஜினிகாந்த் 160 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி படத்தில் பிரபல கன்னட நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் பிரமாண்ட செட் போடப்பட்டு இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

தன்னுடைய முந்தைய படங்களை போல இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்துடன் கூலி படத்தை இயக்கி வருவதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலி படத்தில் உபேந்திரா கேமியோ கேரக்டரில் நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ரஜினிகாந்துடன் இணைந்து இந்த படத்திற்காக பாடல் ஒன்றிலும் நடனமாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நடிகர் விஷாலின் சத்யம் படத்தில் முக்கியமான கேரக்டரில் உபேந்திரா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை தமிழில் பெற்றுக் கொடுத்த நிலையிலும் அவர் கன்னடத்தில் பிஸியான நடிகர் என்பதால் அவரால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் -உபேந்திரா காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.