தனுஷ் இயக்கி தனுஷே நடிக்கும் 50வது படம்.
கதைப்படி காத்தவராயன் என்கிற ராயனுக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையார் எங்கு சென்றார்கள் என்ற புரியாத காரணத்தினால், சில பிரச்சனைகள் காரணமாக சென்னை மார்க்கெட்டில் செல்வராகவனின் அரவணைப்பில் வளர்கிறார்கள்.
அதில் இரண்டாவது தம்பியாக வரும் சந்திப் கிஷன் மது அருந்திவிட்டு வம்பு வளர்ப்பதிலேயே குறியாக இருப்பவர். ஆனால் துடித்த கடையின் ஓனரான தனுஷ் பொறுப்பாக தம்பிகளையும், தங்கச்சியையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் சந்திப் கிசன் செய்த ஒரு பிரச்சினையால், தனுஷ் தலையிட நேரிடுகிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பது தான் படத்தின் கதைக்கரு.
தனுஷ், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், இளவரசு என அனைவரையும் நன்றாகவே வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
படத்தின் காட்சி அமைப்புகளும் ஒளிப்பதிவும் மிகவும் தத்ரூபமாக இருப்பதால் படத்தின் கதைகளுக்குள் நம்மால் சுலபமாக ஒன்றி விட முடிகிறது.
ஏ ஆர் ரகுமானின் இசை இந்த படத்திற்கு பலமாக இருக்கிறது.
தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படம் என்ற காரணத்தினால், தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நினைப்பில் ஒரு படத்தை இயக்காமல், கதைக்கு என்ன தேவையோ அதற்காக மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி, அவர்களுக்கும் ஒரு ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்து கதையை நகர்த்திச் சென்று இருப்பது மிகவும் அருமை.
துஷாரா விஜயனும், அபர்ணா பாலமுரளியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ஆனால் இதில் மூன்றாவது நடிகையாக வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார். அவரை நாட்டாமை படத்தில் வரும் ‘மிக்சர் சாப்பிடும்’ கதாபாத்திரம் போல் ஆக்கிவிட்டார்கள்.
படத்தின் கதையில் இருந்த தெளிவு திரைக்கதையில் இல்லை என்றே கூற வேண்டும்.
நிறைய இடங்களில் லாஜிக் ஓட்டைகள் தெரிகின்றன. குறிப்பாக ஒரு மிகப்பெரிய வன்முறை சம்பவம் நடக்கும் இடத்தில் போலீசார் மிகவும் சுலபமாக கடந்து சென்று விடுவது ஏற்புடையதாக இல்லை.
ஒரு காட்சியில் துஷாரா விஜயனுக்கு ஒரு சம்பவம் நடந்ததாக கூறப்படும், அதற்கு உண்டான வீடியோ காட்சிகள் எதுவுமே இல்லாமல் கதையை நகர்த்திச் செல்லும் போது பார்வையாளருக்கு அது எப்படி புரிய வரும்.?
படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளன. இது குடும்ப பாங்கான படங்கள் விரும்பும். ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பது கேள்விக்குறி..?
வெற்றிமாறன், செல்வராகவன் கேங்ஸ்டர் படங்களை இதற்கு முன்னால் எடுத்திருக்கிறார்கள். இதில் தனுசும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் வரும் முரண்பாடான காட்சிகள் எதுவும் நம் கண்ணை துருத்துவதற்கு வாய்ப்பே இல்லாத மாதிரி கதையை நகர்த்திச் சென்று இருப்பார்கள். ஆனால் இதில் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலை பேசுவதற்கு பதிலாக அதில் உள்ள வன்முறையை கையில் எடுத்திருக்கிறார் தனுஷ். ( அவர்களிடமும் ஒருமுறை கதையைச் சொல்லி ஒரு ஒப்பினியன் வாங்கி இருந்திருக்கலாம் )
அவருக்கு பிடித்த நடிகரான ரஜினியின் தர்மதுரை படத்தை ஒரு தடவை பார்த்து இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் தனுஷின் ராயன் படம் முழுக்க முழுக்க அவரின் ரசிகர்களின் உற்சாகத்தை தூண்டுவதற்காகவே எடுக்கப்பட்ட படம்.