வசூலை அள்ளுமா ராயன் படம் ..?

நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி, எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், விஷ்ணு விஷால் இன்னும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

‘ராயன்’ திரைப்படம் சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

தனுஷை வைத்து நிறைய படம் அண்ணன் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். அந்த வகையில், இப்போது அண்ணனை வைத்து தம்பி தனுஷ் இயக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவருக்கும் ஒரு கம்பேக்காக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

தனுஷின் 50 வது படமான ‘ராயன்’ தனுஷ் இயக்கி நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

தமிழக அரசிடம் ராயன் படக்குழு 5 காட்சிகளுக்கு அனுமதி கேட்டு வேண்டுகோள் விடுத்தது. தமிழக அரசும் அனுமதி வழங்கி உள்ளது. அதன் படி, நாளை 5 காட்சிகள் திரையிடப்படும்.

சென்சார் போர்டு ராயன் படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் இருப்பதாலே இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருப்பதாக தெரிகின்றது.

ராயன் படக் காட்சிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிவரை திரையிடப்படும்.

ராயன் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலரை பார்க்கும்போது இப்படம் புதுப்பேட்டை, வடசென்னை போல செம மாஸான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

ராயன்’ படத்திற்கான டிக்கெட் விற்பனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. அதிலும், 5 கோடிக்கு மேல் ‘ப்ரீ’ புக்கிங் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ப்ரீ’ புக்கிங்க்கில் 5 கோடி வசூல் செய்த ‘ராயன்’ திரைப்படம் முதல் நாளே நல்ல வசூல் சாதனைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களின் எதிர்ப்பார்ப்பை ‘ராயன்’ திரைப்படம் பூர்த்தி செய்யுமா?