தம்பி கார்த்தி நடிக்க … அண்ணன் சூர்யா தயாரிக்க… அடடா.. என்ன பாசம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் உருவான ஜப்பான் படம் தோல்வியை சந்தித்தது. இதனால் கார்த்தியின் நடிப்பில் ஒரு தரமான படம் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் செம ஆவலாக இருந்தனர்.

அந்தவகையில் தற்போது கார்த்தியின் 27 ஆவது படம் குறித்த சூப்பர் டூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2D என்டர்டெயின்மெண்ட் சார்பாக சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்குகிறார். (96 படம் இன்னொருவரின் கதை என்ற பிரச்சனை எழுந்தது குறிப்பிடத்தக்கது )

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகும் இந்த படத்தில் கார்த்தி, அர்விந்த் சாமிஉள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அரவிந்த்சாமி ஒரு கதையில் நடிக்கிறார் என்றால் அந்த கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் நடிக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.