ஹிந்தி நடிகை லைலா கானின் மரணம்: 13 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு

2011ஆம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் உள்ள பங்களா ஒன்றில் பாலிவுட் நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் 5 உடன்பிறந்தவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையை விசாரித்த போலீசார், லைலா கானின் வளர்ப்பு தந்தை பர்வேஸ் தாக்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பர்வேஸ் தாக், நடிகை லைலா கானின் தாய் செலினாவின் 3வது கணவர். கொலை நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, AIMMU காஷ்மீர் காவல்துறையினரால் பர்வேஸ் தாக் கைது செய்யப்பட்டார்.

மேலும், லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு பங்களாவில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கின் விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 10 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில், பர்வேஸ் தாக் மீதான கொலை, சாட்சியங்கள் அழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி சச்சின் பவார் கடந்த 9ஆம் தேதி அறிவித்தார்.

நடிகை லைலா கானின் தாய் செலினாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த பர்வேஸ் தாக், முதலில் அவரைக் கொன்றுவிட்டு, பின்னர் லைலா கான் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பர்வேஸ் தாக்குக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் முடிவுக்கு வந்தது.