ஆதிரன் சுரேஷ், வின்சென்ட் ராகுல், ராஜசிவன்,சதீஷ், தக்ஷனா உட்பட பல நட்சத்திரங்களின் நடிப்பில் புதுமுக இயக்குனர் தர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.
கதைப்படி நடிகர் ஆதிரன் சுரேஷின் அப்பா பிரபஞ்ச விதியை மிகவும் கடுமையாக கடைப்பிடிப்பவர். நாம் என்ன சொல்கிறோமோ அதுவே நமக்கு பின் விளைவாக வரும் என்று நம்பக் கூடியவர். ஆகையால் நல்லதே பேசு நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில் இருக்க கூடியவர். அப்படிப்பட்ட ஒரு அப்பாவுக்கு பிள்ளையாக இருக்கும் ஆதிரன் சுரேஷிற்கு திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சினை காரணமாக அவர் பணத்தை வேண்டி தன் சொந்த ஊருக்கு பயணப்படுகிறார் அவர் மட்டும் இல்லாமல் அவரது நண்பர்களும் கூடவே பயணிக்கிறார்கள். ஆனால் போகும் வழியில் திடீரென்று அவரது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி விடுகிறது. பஞ்சர் ஒட்டுவதற்காக ஒரு இடத்திற்கு செல்கிறார்கள், அங்கே என்ன நடந்தது? எது நடந்தது? என்பதுதான் படத்தின் கதை கரு.
படத்தின் கதை மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தாலும் திரைக்கதை மிக மிக வித்தியாசமான ஒன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக முதல் பாதி படத்தை மிக மிக மெதுவாக நகர்த்தியதால் நமக்கு ஒரு மிகப்பெரிய மஅயற்சியையும் கோபத்தையும் தரும். ஆனால் இரண்டாம் பாதியில் படத்தின் விறுவிறுப்பு நம்மை நாற்காலி முனையில் உட்கார வைக்கும் என்பது உறுதித்தரமான உண்மை.
இந்தப் படத்திற்கு மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுவது கதாநாயகி என்று ஒரு கதாபாத்திரம் கூட இல்லாதது மட்டுமே. மற்றபடி இந்த படத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் குறிப்பிடப்பட்ட முக்கியமான சம்பவங்கள் மட்டுமே.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாழ்வியல் பகுதியை மிகவும் யதார்த்தமாக படபிடித்து இருக்கிறார் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அதுமட்டுமில்லாமல் படத்தின் பின்னணி இசை இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது என்று கூறலாம்.
ஆனாலும் ஆகக் கடவன படம் பெரிதாக ஜொலிக்காது. காரணம் என்னவென்றால் இந்த படத்திற்கு எந்த ஒரு நடிகர்களின் மதிப்பும் இல்லாத ஒரு காரணத்தினால் இந்த படத்தை திரையரங்குகளில் எத்தனை பேர் வந்து பார்ப்பார்கள் என்று தோன்றவில்லை. ஆனால் இதே படம் தங்களது அலைபேசியில் வந்தால் அனைவரும் ரசிப்பார்கள் என்று நிச்சயமாக சொல்லலாம்.