மைய்யல் திரைவிமர்சனம்!

மைனா படப்புகழ் சேது, சம்ரிதா தாரா, PL தேனப்பன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் EPJ ஏழுமலை இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

கதைப்படி PL தேனப்பன் தனது பெரியப்பாவான ஜமீன்தாரை சொத்துக்காக ஆசைப்பட்டு அவர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்கிறார். இதனை துப்பு துவங்குவதற்காக ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார். அதே சமயம் அந்த ஊரில் ஆடு களவணியாக வரும் சேது திடீரென்று ஆட்டை களவாடியதற்காக அந்த ஊர் மக்களிடம் சிக்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கிணற்றில் விழுந்து தப்பிக்கிறார். அந்த நேரம் பார்த்து அவரை ஒரு பெண் காப்பாற்றுகிறார். ஆனால் அந்தப் பெண் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவள் மேலும் அவள் சூனியக்காரி என்று அறியப்படுகிறாள். ஆனாலும் அந்தப் பெண்ணிற்கு மனதில் சேதுவைப் பார்த்ததும், ஒரு சின்ன ஆசை தயக்கம் வருகிறது. இவனை தனது கணவன் என்று ஏற்றுக் கொள்ளலாமே என்று யோசிக்கும் அதே சமயத்தில், தான் மூத்தவன் என்ற காரணத்தினால் இவளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சந்தேகத்தில் இருக்கிறார் நாயகன் சேது. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் இடையில் இவர்களுக்குள் நடந்த இந்த பிரச்சனைகளால், இவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் ஒட்டுமொத்த கதையும்.

நடிகர்களான சேது, சம்ரிதா தாரா மேலும் அந்த பாட்டி ஆகியோரின் நடிப்பு மிகவும் கச்சிதம்.

திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். என்னதான் கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும் திரைக்கதை ஒரே மாதிரியாக பார்ப்பதற்கு தோன்றியதால் இந்த படத்தை ஒன்றி பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் இந்தப் படத்தில் கதை திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவை அனைத்தும் புகழ்பெற்ற எழுத்தாளரான திரு ஜெயமோகனின் எழுத்துகள் என்பது முற்றிலும் ஏற்புடையதாக இஇல்லை. மேலும் இது உண்மையிலேயே ஜெகன்மோகனின் ஜகதைதானா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு கிராம பின்னணியை மிகவும் எதார்த்தமாக காட்டி இருந்தாலும், படத்தின் இயக்கம் அவ்வளவு நேர்மறையாக இல்லாத காரணத்தினால் இந்த ஒளிப்பதிவும் சரி இசையும் சரி பெரிதாக பேசப்படாமலேயே போய்விட்டது என்று கூறலாம்.

ஆக மொத்தத்தில் மையல் படம் பெரிதாக மையம் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.