கே.எஸ் ரவிக்குமார், பூமிகா சாவ்லா, யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் RK வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கதையின்படி அடுத்தடுத்து மாணவர்களும் மாணவியரும் ஒரு பள்ளிக்கூடத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மீண்டும் அவர்கள் ஆவியாக வந்து மற்றவர்களையும் தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள் இது இந்த பள்ளிக்கு நல்வினையை சேர்த்திருக்கிறதா..? கெட்டவினையை சேர்க்கிருதா? இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன? என்று அலசி ஆராய்வதே ஸ்கூல் படத்தின் கதை கரு.
கதை என்னவோ நன்றாக இருந்தாலும்,திரைக்கதையில் அந்த அளவுக்கு தெளிவில்லாத தன்மை இருப்பதால் நம்மால் ரசிக்கவே முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. படத்தில் பயமில்லை, அழுத்தம் இல்லை, தாக்கம் இல்லை, இயக்கம் இல்லை உணர்வுமில்லை, உறவும் இல்லை, ஆக மொத்தத்தில் இதை ஒரு பேய் படம் என்று ஒப்பீடு செய்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.
நடிப்பை பொறுத்தவரைக்கும் யோகி பாவும் சரி, கே.எஸ். ரவிக்குமாரும் சரி, பூமிகாவும் சரி அனைவரும் அவர்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் திரைக்கதையின் பலமின்மை தான் இந்தப் படத்தை மிகவும் மெதுவாக நகர்த்தியதற்கு காரணம்.
ஒளிப்பதிவு, இசை, நடனம், எடிட்டிங் ஆகிய அனைத்தும் நன்றாக இருந்தாலும் கதையும் சரி, கதைக்களமும் சரி தெளிவில்லாமல் இருந்த ஒரே காரணத்தினால் இந்த படத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக யோகி பாபுவிற்கு எந்த ஒரு படமும் பெரிதாக ஓடவில்லை. இனிமேலாவது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நடித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆக மொத்தத்தில் ஸ்கூல் படம் கோடை விடுமுறைக்கு போகக்கூடாத ஒரு இடம்.