அறிமுக நடிகர் சதாசிவம், சாய் தன்யா, பிளாக் பாண்டி, ஆதவன், பேரரசு, செந்தில்குமாரி, லொள்ளுசபா மனோகர், ஒஎகே சுந்தர் இன்னும் பல நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்.
தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக் கடன் என்று சுலபமாத தவணை என்று சொல்லி மாதத்தவனையை(EMI) கட்ட முடியாமல் பேங்க் காரர்களும் ஜப்தி செய்பவர்களும் நம்மை எப்படி எல்லாம் வாட்டி வதைக்கிறார்கள் என்ற மையக்கருவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.
இஎம்ஐ பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரச்சனை தான். ஆனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று சொல்லாமல் ஒரு வணிக ரீதியான சினிமாவை எடுக்கிறேன் என்ற பெயரில் அனைவருக்கும் தெரிந்த பிரச்சினையை எடுத்து வைத்திருக்கிறார்கள். சரி அதையாவது ரசிக்கும் படியாக எடுத்தார்களா? அதுவும் இல்லை. சலிப்பைத் தட்டுகிறது.
நடிகர் சதாசிவம் நடிப்பில் நிறைய கவனம் தேவை, சாய் தன்யா பிளாக் பாண்டி நடித்தும் பிரயோஜனம் இல்லை. ஆதவன் காமெடி ஜொலிக்கவில்லை. பேரரசு வாயைத் தவிர வேறு எதுவும் நடிக்கவில்லை.
ஒரு கதைக்கு மிகப்பெரிய பலம் திரைக்கதை. ஆனால் இந்த படத்தின் முதல் பாதி பெரிதாக யாரையும் கவரவில்லை. இரண்டாம் பாதி கவரும் என்று எதிர்பார்த்தால் அந்த அளவுக்கு இல்லை.
பாடல்கள் சுமார், ஒளிப்பதிவு சுமார் லாஜிக் மீறல்கள் அதிகம். இப்படி படத்தில் குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நிறை என்று ஒன்று இல்லவே இல்லையா என்று கேட்கலாம். மூன்று மாத இஎம்ஐ கட்டவில்லை என்று ஒரு காட்சி வரும், அதில் ஓ ஏ கே சுந்தர் இதுவரை அவர் கொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு பைக்கை ஜப்தி செய்து கொள்ளலாம் என்று கூறுவார். அந்தக் காட்சி மிகவும் நன்றாக இருந்தது.
மற்றபடி இஎம் ஐ அனைவருக்கும் தெரிந்த ஒரு மாதத் தவணை. இதில் இந்த படத்தில் புதுமை எதுவும் இல்லை.