சுழல் 2 திரைவிமர்சனம்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், லால், பருத்திவீரன் சரவணன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ்.

சுழல் ஒன்றில் உள்ள கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வேற ஒரு கதைக்களம், வேறு ஒரு கதை கருவுடன் இந்த வெப்சைட்டை கொடுத்திருக்கிறார்கள் எழுத்தாளர்களான புஷ்கர் காயத்ரி.

சுழல் 1ல் ஐஸ்வர்யா ராஜேஷ் குமரவேலை கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்ற காவலில் இருக்கிறார். இன்னொரு பக்கம் அவர் உபயோகித்த துப்பாக்கி சர்க்கரை என்கிற நடிகர் கதிரின் துப்பாக்கி என்பதால் அவர் கம்பல்சரி விடுமுறையில் இருக்கிறார்.

இந்த நிலையில் வழக்கு வாதாடும் வக்கீலாக கதிரின் சொந்தக்காரரான லால் வருகிறார்.

தீர்ப்பு நாள் நெருங்கும் வேளையில் திடீரென்று லால் சுட்டுக் கொள்ளப்படுகிறார். அந்த கொலைக்குக் காரணம் நான் தான் என்று 8 பெண்கள் 8 வெவ்வேறு காவல் நிலையத்தில் ஆஜர் ஆகின்றனர்.

லால் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன 8 பெண்கள் ஏன் லாலை கொன்றதாக ஆஜரானார்கள் இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தண்டனையிலிருந்து விடுபட்டாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் சுழல் 2 வின் முழு கதையும்.

மொத்தம் உள்ள 8 எபிசோடுகளில் முதல் மூன்று எபிசோட் மிக மெதுவாகவே நகரும். பலருக்கும் சுழல் ஒன்று போல இல்லையே என்று தோன்றலாம். ஆனால் நான்காவது எபிசோடில் இருந்து கதை சூடு பிடிக்கிறது.

அதிலிருந்து எடுக்கும் வேகம் எட்டாவது எபிசோடு வரை நம்மை நாற்காலி முனையில் உட்கார்ந்து பார்க்க வைக்கும்.

இந்த வெப் சீரிஸ் க்கு இசையும் ஒளிப்பதிவும் கூடுதல் பலம். அதிலும் குறிப்பாக மிகவும் அதிகமான பொருட்செலவில் இந்த வெப்சரிசை எடுத்து இருக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது நமக்கே தோன்றும்.

இந்த வெப் சீரிஸை இயக்கிய இரண்டு இயக்குனர்களும் மிக நேர்த்தியாக இயக்கி இருக்கிறார்கள். கதிருக்கு இந்த வெப் சீரிஸ் ஒரு கம்பேக் கொடுக்கும் என்று நம்பலாம்.

ஆக மொத்தத்தில் சுழல் 2 பார்க்கக்கூடிய பார்க்கப்பட வேண்டிய ஒரு வெப் தொடர்.