அறிமுக நட்சத்திரங்களை வைத்து புதுமுக இயக்குனர் ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
ஆங்கிலத்தில் வெளியாகி மிகவும் புகழ்பெற்ற படங்களான பேரா நார்மல் ஆக்டிவிட்டி போன்று Found Footage என்று சொல்லக்கூடிய லைவ் கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படம் தான் இந்த மர்மர்.
ஒரு காட்டுக்குள் சப்த கன்னிகளும் நங்கை என்ற ஆவியும் உலாவுவதாக சுற்றும் வரலாற்றை கேட்டு நான்கு இளைஞர்கள் டாக்குமென்டரி பிலிம் எடுப்பதற்காக காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு அவர்கள் நினைத்தபடி அந்த சப்த கன்னிகளை கண்டர்களா அந்த நங்கையை சந்தித்தார்களா என்பது தான் படத்தின் கதை கரு.
படத்தின் முதல் பாதி நீளம், என்றால் இரண்டாம் பாதி நீளமோ நீளம். கதையை விட தேவையில்லாத சலசலப்பை கொடுத்து பயமுறுத்துகிறேன் என்ற பெயரில் நம்மளை சிரிக்க வைத்தது தான் மிச்சம்.
படத்திற்கு இசையாவது நன்றாக இருக்கிறதா என்றால் அங்கங்கே சிலரை சத்தம் கேட்கிறது அதுவும் பெரிதாக இல்லை.
இந்த படத்தின் இயக்குனர் ஹேமத் நாராயணன் இந்த படத்தை பெரிதாக பேசியிருந்தார். அவர் ஒருவேளை கொஞ்ச வருடத்திற்கு முன்பாக கன்னடத்தில் வெளியான 2 + 2 = 5 என்கிற படத்தை பார்க்கவில்லை போலும்.
ஆக மொத்தத்தில் மர்மர் படம் எந்த ஒரு மர்மத்தையும் அவிழ்க்கவில்லை.