ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
ஒரு பெண்ணின் உரிமைக்காக பெண்ணே பிணமாக இருந்து போராடுவது தான் எமகாதகி படத்தின் கதைக்கரு.
மூச்சுத் திணறலில் அவதிப்படும் ரூபா தஞ்சாவூர் மாவட்டத்தில் அவர் சொந்த ஊரில் காப்பு கட்டு திருவிழாவிற்காக வருகிறார். அப்போது அவருக்கும் அவருடைய அப்பாவிற்கும் ஒரு வாக்குவாதம் நடந்து இதனால் அவர் ஒரு அறையில் கதவை மூடி கொள்கிறார். பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதனால் இறுதிச் சடங்கில் அவரின் பிணத்தை வெளியே தூக்கும் போது, அதை தூக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். எதனால் ரூபாவின் பிணத்தை தூக்க முடியவில்லை அதற்கு பின்னனி காரணம் என்ன என்பதை சொல்லும் ஒரு சூப்பர் நேச்சுரல் திரில்லர் படம் தான் இந்த எமகாதகி.
ஒரு நல்ல திரைகதையை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு திரைக்கதை நேர்த்தி அழுத்தமான வசனங்கள். வசனகர்த்தா ராஜேந்திரனுக்கு பாராட்டுக்கள்.
அறிமுக நடிகை ரூபாவின் நடிப்பு செம. அதற்கு இணையாக டப் கொடுக்கிறார் கீதா கைலாசம். மற்ற நடிகர்கள் அனைவரின் நடிப்பும் சுமார் ரகம்.
இந்தப் படத்தின் பின்னணி இசை அருமையோ அருமை ஆனால் பாடல்கள் சுமார் ரகம்.
ஒரே ஒரு வீட்டில் நடக்கும் சம்பவம் என்ற காரணத்திற்காக படத்தை போர் அடிக்க விடாமல் காட்சிகளையும் கோணங்களையும் மாற்றி நம்மை திரைக்கதையில் ஒன்றை விட்ட ஒளிப்பதிவாளருக்கு நன்றி.
இந்தப் படத்தின் இயக்குனரான பெபின் ஜார்ஜ் ஜெயசீலன், ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். ஆனால் படத்தைப் பார்க்க மக்கள் வரவேண்டும் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
ஆக மொத்தத்தில் எமகாதகி ஒரு நல்ல படம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.